வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்துக்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில்நந்தனன் ஆகியோருக்கே இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்களாக இருந்த இருவரும் இந்த ஆண்டின் ஜனவரி மாதமே தற்போதைய அமைச்சுகளுக்கு இடமாற்றப்பட்டனர்.
தற்போது மாகாணத்திற்கு வெளியில் தூக்கி எறியப்படுவதால் பழிவாங்கும் செயலாக இருக்குமா என கேள்வி எழுப்பப்படுகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post