அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதி வரையறை செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், மொத்தமாக எரிபொருள் கிடைத்தாலும் கூட அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post