ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களின் ஆளுநர்களை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது. இந்த ஆளுநர் மாற்றங்கள் இன்னும் சில தினங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதுள்ள ஆளுநர்கள் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்டவர்களாவர். தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஆளுநர்களை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் மாற்றப்படுவார்கள் என்று தெரிகின்றது. அதற்கான பூர்வாகங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் சில நாள்களில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கொழும்பு உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post