நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மஹிந்த ராஜபக்சவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச வீட்டில் விருந்து வைத்துக் கொண்டாடினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.
அன்றைய தினம் இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் இரவு உணவுடன் பெரும் “பார்ட்டி” நடைபெற்றது என்று தெற்கு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த “பார்ட்டியில்” 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகின்றது.
அதிகாலை 3 மணிவரை நடந்த அந்தப் “பார்ட்டியில்” அனைத்து வகை உற்சாக பானங்களும் இருந்தனவாம். அதேநேரம், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலத்தவும் அந்தப் “பார்ட்டியில்” கலந்து கொண்டிருந்தாராம்.
Discussion about this post