காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கொண்டு அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக பாதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்சக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Discussion about this post