நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான சுவாரசியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வாக்கெடுப்புக்கு முதல்நாள் மாலை மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் உள்ள வளாகத்தில் திடீரென எரிவாயு சிலிண்டர்களுடன் லொறி ஒன்று சென்றிருக்கின்றது. அங்கிருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டணத்துடன் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் இருந்தவர்களோ இன்ப அதிர்ச்சியில் சிலிர்த்துப் போயுள்ளனர்.
“கோத்தாபயவும் இருந்தாரே.. எப்போதாவது இப்படிச் செய்தாரா?” என்று வீட்டில் இருந்தவர்கள் அங்கலாய்த்திருக்கின்றனர். “பேசாமல் ரணிலுக்கே சப்போர்ட் செய்யுங்கள். ஏதாவது நல்லது கிடைக்க வழி செய்யுங்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலேயே ஒரே நச்சரிப்பாம். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் ரணில் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றாராம்.
அதேநேரம், “அக்டிங்” ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இப்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டபோதும், இன்னமும் அவர் “அக்டிங்கை” விடவில்லை. இராணுவத் தரப்புகள் ராஜபக்சவின் பக்கம் என்ற பொதுவான கருத்து இருக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் தடாலடியாக ஒரு காரியத்தைச் செய்திருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.
நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது, திடீரென காரை விட்டு இறந்கி, அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த படையினரைச் சந்தித்து சகஜமாகக் கலந்துரையாடியிருக்கிறார். அவர்களைப் பாராட்டி உச்சி குளிர வைத்துள்ளார். படையினரும் இப்போது ரணிலை ஆஹா, ஓஹோ என்று புகழ்கிறார்களாம்.
Discussion about this post