நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஊடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணிலை நாட்டின் ஜனாதிபதியாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களாணையைத் தொடர்ந்தும் நிராகரித்தால் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு எரிக்கும் நிலைமையே தோன்றும் என்று காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.
காலாவதியான பொதுஜன பெரமுனவின் வாக்குகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நடந்த சதிகள் ஊடுாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார் என்று தெரிவித்துள்ள அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு மக்கள் ஆணையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றம் மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், மக்களாணையை மீறிச் செயற்பட்டால் நாடாளுமன்றத்தை மக்கள் தீயிட்டு எரிக்கும் நிலை உருவாகும் என்றும் மக்கள் விருப்பத்துக்கு மாறாக அமைக்கப்படும் அரசாங்கத்துக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இன்னமும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெளிவாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post