ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் டுவிட்டரில் பதவிட்டு சஜித் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றது.
எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.
இதன் போது அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல் தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளது” என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் ஊடாக சஜித் பிரேமதாஸ அடுத்த பிரதமராக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post