எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விவகாரம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக கடந்த சில நாள்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பல உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதியை நியமிப்பதற்கான முக்கிய வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறவுள்ளது. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று சபாநாயகர், அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
Discussion about this post