பொதுமக்களுக்கு அவசியமான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கான உடனடி சலுகைக் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்குப் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றுமுன்தினம் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள சலுகைப் பாதீட்டில் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்தும் முறைமையை வலுப்படுத்தவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் மற்றும் உரங்களை உடனடியாகவும், கிரமமாகவும் வழங்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் சபை என்பது சிறந்த யோசனை என்று பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழலை இல்லாதொழிக்கும் நடைமுறைகள் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது – என்றுள்ளது.
Discussion about this post