எரிபொருள் வரிசையில் காத்திருந்த 40 வயதான ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கெக்கிராவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நடந்துள்ளது.
அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டிச் சாரதியான இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்தார் என்றும், அங்கிருந்தவர்கள் அவரை கெக்கிராவ வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post