கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்து தீர்வு காணுமாறும் தொடர்ந்து வலியுறுத்துவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post