இலங்கையில் இருந்து தப்பித்துச் சென்று மாலைதீவில் தங்கியிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்டுச் சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளார்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முதல் பெண்மணி அயோமா நிற்கும் ஒளிப்படம் ஒன்று விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் வருகை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு, தனிப்பட்ட பயணமாகவே கோத்தாபய ராஜபக்ச நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மாலைதீவில் இருந்து சவூதி அரேபிய ஜெட் விமானம் ஒன்றில் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த கோத்தாபய ராஜபக்சவை, மாலைதீவின் சபாநாயகர் முகமட் நசீட் விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்துள்ளார்.
இவரே கோத்தாபய ராஜபக்ச மாலைதீவில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தார்.
Discussion about this post