மக்களின் எதிர்ப்பால் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த மாபெரும் போயா நாளில், நாடு, தேசம் மற்றும் மதத்தின் நலனுக்காக உங்கள் நல்லெண்ணத்தைப் பேணுவதன் மூலம் புத்தரின் நிலத்தை உங்கள் உயிரால் பாதுகாப்பது உங்கள் கடமை என்பதை நான் மிகவும் அன்புடனும் கருணையுடனும் கூறிக்கொள்கின்றேன் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்றுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மாலை 6 மணிக்குக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தபோது, கோட்டாபய ராஜபக்ச மாலே – சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஆகாயத்தில் இருந்தாராம்.
பதவி விலகல் கடிதத்தை “ரைப்” செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம் என்று சபாநாயகர் கூறினார் என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post