ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருப்பதன் காரணமாக, ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் 37 (1) பிரகாரம், ஜனாதிபதியினால், பிரதமர் ரணில் விக்கிரசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post