ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அத்துடன், சர்வக்கட்சி அரசு குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக சபாநாயகர் தலைமையில் இன்று பிற்பகல் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளும் கொழும்பில் இன்று மந்திராலோசனை நடத்திவருகின்றன.
இதற்கிடையில் சர்வக்கட்சி அரசின் அமைச்சரவை தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.
இதில் ஜனாதிபதி பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதெனவும், பிரதமராக எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சரவை பட்டியலில் சாணக்கியனும் இடம்பிடித்துள்ளார்.
Discussion about this post