ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இருந்து சைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்த சைக்கிள் பேரணி யாழ்ப்பாணம் நகரை அடையவுள்ளது.
நாளை நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக் குழு, தேசிய கலை இலக்கியப் பேரவை, தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸ கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்ப இந்தப் பேரணிக்கு ஆதரவளித்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வெகுஜன அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post