நாளை அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நாடு முழுவதும் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன, இராணுவத் தளபதி லியனகே ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது என்றும், அதில் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாதபோதும், நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் திடீரென எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாலேயே சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது.
Discussion about this post