டெங்குத் தொற்றுக்குள்ளான இளைஞர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்துள்ளது.
இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், இளைஞரின் உயிரிழப்புக்கு டெங்குத் தெற்றே காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, ஆத்தியடியைச் சேர்ந்த பவானந்தன் கஜேந்திரன் (வயது-21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இளைஞருக்குச்ச சில நாள்களாகக் காய்ச்சல் காணப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோது மயங்கிச் சரிந்துள்ளார்.
அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.
Discussion about this post