ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கைக்குரிய குழுவொன்று உள்ளது. அந்த குழுவையும் இணைத்துக்கொண்டு ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார். அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் எம் வசம் உள்ளன.
அதேவேளை, மாற்று தரப்பொன்று ஆட்சியை பொறுப்பேற்றால்கூட, தேர்தல் எப்போது நடத்தப்படும், பிரச்சினைகள் தீர்க்கப்படும் காலப்பகுதி அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாமும் ஆதரவு வழங்குவோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Discussion about this post