கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த தாயின் கழுத்தை கூரான ஆயுதத்தால் அறுத்து கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற கொடூரச் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இருதெனியாய,தொலம்புஎல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுண்ட பெண்ணின் கணவர், ‘ வயம்பஎல’ திட்டத்தில் பணி புரிகின்றார்.
நேற்று (4)காலை இந்தப் பெண் பொல்பித்திகம நகருக்கு சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இந்தத் துர்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய் கொலை செய்யப்பட்டபோது, அவரது ஒன்றரை வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளியை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
Discussion about this post