பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க ரணில் விக்ரமசிங்க தவறியதன் காரணமாக அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த முன்னாள் நிதியமைச்சர் அலி சப்றி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றபோதும், இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Discussion about this post