சுரங்கத்தொழில் மற்றும் கனியவளங்கள் அகழ்வுகளை கைத்தொழில்துறையில் முதலிடுவதற்காக
அமெரிக்காவின் ஒத்துழைப்புக்களை பெறுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடினார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் கடந்த முதலாம் திகதி அமெரிக்கத்தூதுவர் ஜூலிசங்குடன் நடத்திய கலந்துரையாடலிலே, இதுகுறித்துப் பேசப்பட்டது.
இருதரப்பு உறவுகள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்தப்பட்ட இச்சந்திப்பில், இலங்கையின், தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பதன் அவசியத்தையும் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.
உயிரியல் பல்வகைத் தன்மையால் சுற்றாடல்துறையில் ஏற்படும் சமநிலைத் தளம்பலைக் கட்டுப்படுத்தி, சூழல் மாசடைதலைத் தடுப்பது பற்றி கலந்துரையாடிய அமைச்சர், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மூலோபாயங்களை தணிப்பதற்கான ஒத்துழைப்புக்களையும் கோரினார்.
மேலும், கைத்தொழில்துறையில் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இலங்கை முதலீடுகளில் அமெரிக்காவின் கவர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இதன்போது ஆராயப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பில், சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாஸிங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் அமைச்சரின் ஆலோசகருமான கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Discussion about this post