எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் மூன்று டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்தது.
இந்த கப்பல்கள் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் ஓகஸ்ட் மாதம் 10 மற்றும் 15 ஆம் திகதிகளிலும் நாட்டை வந்தடையவுள்ளன என்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வரவுள்ளது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் குறிப்பிட்டார்.
Discussion about this post