அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்காவிட்டாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு மூடப்படும் அபாயம் உள்ளது என்று சிங்கள் ஊடகமான லங்காதீப வார இதழ் தெரிவித்தது.
அத்தியாவசிய சேவைகளைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ளது என்றும் ஒரு தொகுதி இறக்குமதி செய்யப்படும் வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுமின்றி, சுகாதாரக் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளர் காவு வண்டிச் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதுமான எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்கனவே உருவாகியுள்ளது. நாடு அடுத்த வாரம் முடக்க நிலையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post