நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக க.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன , எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. முதற் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் முதல் இரு வாரங்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Discussion about this post