இலங்கையிலுள்ள நான்கு முக்கிய பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 10 அம்ச கடிதமொன்றை எழுதி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
உண்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்தத் தருணத்தில் கட்சி அரசியலில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்திய அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சரியான பொருளாதாரத் திட்டமில்லாமல் செயற்படும் நிர்வாகத்தின் விளைவாகவே இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளது என்றும் மாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post