கொட்டாவ- மாகும்புர பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான சிறு வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் 07 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறையின் போது, மாகும்புர தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், சாரதி ஆகியோர் தாக்கப்பட்டதுடன், கெப் வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது.
Discussion about this post