முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரும், மாணவர்களும் இணைந்து சுமார் 20 மாணவிகளை வீடியோப் படம் பிடித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஆசிரியரும், மாணவன் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தரம் 11 ஐ சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
மாணவர்கள் மாணவிகளுக்குக் காதல் வலை விரித்து, அவர்களை நிர்வாண வீடியோக்கள் எடுத்துள்ளனர் என்றும், அந்த வீடியோக்களை வைத்து ஆசிரியர் மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது.
மாணவிகளின் வீடியோக்களை, மாணவர்கள் தங்களுக்கிடையே வட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். ஆசிரியர் மாணவர்களிடம் வீடியோவைப் பெற்று, மாணவிகளை அச்சுறுத்தி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
5 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் பொலிஸ் தகவல்கள், சுமார் 20 வரையான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்றுப் பின்னர் ஆசிரியர் சேவைக்கு மாறியவர் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
Discussion about this post