திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் திருகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை நடந்துள்ளது.
செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் குடும்பத் தகராறின்போது பெண்ணின் கழுத்தைக் கட்டியால் வெட்டினார் என்று கூறப்படுகின்றது.
பெண்ணின் கணவரை அயலவர்களி பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post