மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் மின் வயர்களை வெட்டித் திருடிய குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டுள்ளார் என்றும், அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடாரப்பில் உள்ள மின் தடவழியிலேயே வயர்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தப் பொலிஸார், ஆழியவளையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு இந்த வயர்கள் 2 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டதைக் கண்டறிந்தனர்.
பண்ணை உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட வயர்களின் உண்மையான பெறுமதி 10 லட்சம் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post