முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று சந்தேகிக்கப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கடந்த மே 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட துப்பரவு பணிகளின்போது, புதைக்கப்பட்டிருந்த 7 மண்ணெண்ணெய் பீப்பாய்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதிபதி, அந்த பகுதியில் தோண்டுதல் பணிகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.
Discussion about this post