மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் நீடிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பது குறித்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநரை மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post