உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள மூன்று மில்லியன் மக்களுக்கு அவர்களின் நாளாந்த போஷாக்கு தேவையை பூர்த்தி செய்வதற்காக உலக உணவு வேலைத்திட்டத்திற்கு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 மற்றும் 2023 ஆண்டுக்குள் இலங்கைக்கு அபிவிருத்தி நிதியாக 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆஸ்திரேலியா, வழங்குவதுடன், அது சுகாதார சேவைக்கும் பொருளாதாரத் தேவைக்கும் என தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post