கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானி குழுமத்துக்கு வழங்கப்படுகின்றது என்று வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று துறைமுக, கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
அமைச்சில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-
கிழக்கு முனையத்தை, துறைமுக அதிகார சபையின் செலவில், அதற்கு உரித்தான முனையமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு அவசியமான பளுதூக்கி நிலைத்தாங்கிகளுக்காக, 278 மில்லியன் டொலர் செலவாகும்.
அதில், தற்போது 18 மில்லியன் டொலர் துறைமுக அதிகார சபையால், உரிய விலைமனுக் கோரலுக்கு அமைய, நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பளுதூக்கி நிலைத்தாங்கிகளை நிறுவுவதற்காக, ஒன்றரை ஆண்டுகாலம் எடுக்கும்.
முதற்கட்ட கொடுப்பனவாக சுமார் 39 மில்லியன் டொலரை அந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. எனினும், தற்போதைய டொலர் நெருக்கடியால், அந்தக் கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அதானி குழுமத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல – என்றார்.
Discussion about this post