இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்னரே பெற்றிருந்தால் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. உரிய நேரத்தில் சர்வதேசத்தின் உதவியை நாடாது இருந்தமை தவறு.
இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
சர்வதேச நாணய நிதியத்தை நாடும் தீர்மானத்தை முன்னரே எடுத்திருந்தால் – கடன்களை மீளச் செலுத்தும் நடவடிக்கையை ஒரு ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்திருந்தால் இப்போதைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இப்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கின்றது.
அந்தநிலைமையிலேயே நான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்குச் சம்மதித்தேன். நான் மத்திய வங்கியின் ஆளுநராக இரு மாதங்களே பதவி வகிப்பேன் என்று கருதியிருந்தால் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கமாட்டேன்.
இது இரு மாதங்களுக்குள் தீர்வு காணக்கூடிய நெருக்கடியல்ல. இந்த நெருக்கடிக்கு சீராவதற்கு முன்னதாக, நெருக்கடி இன்னும் தீவிரமாகும் – என்றார்
Discussion about this post