அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்தச் சம்பவத்தில் 6 பொலிஸார் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
அதேவேளை, நாடு முழுவதும் பெற்றோல் மற்றும் டீசலுக்காக மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர். எனினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
அடுத்த எண்ணெய் தாங்கி கப்பல் தரையிறங்கும் திகதி அல்லது திட்டம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சராசரி தினசரி எரிபொருள் நுகர்வு 3 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகக் காணப்படும் நி லயில், தற்போது 10 ஆயிரம் தொன்னுக்குக் குறைவான பெற்றோலே கையிருப்பில் உள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு போதிய டொலர் இல்லாத காரணத்தால் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 21 ஆம் திகதி ஒரு கப்பல் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் ஆனால் அதன் வருகை இன்னும் உறுதியாகவில்லை.
Discussion about this post