ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதாயம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post