யாழ்ப்பாணம், இருபாலையில் புதையல் தேடினர் என்ற குற்றச்சாட்டில் இன்று ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து வெடிமருந்து மற்றும் தங்கம் தேடப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் பலகோடி ரூபா பெறுமதியான தங்கம் புதைக்கப்பட்டுள்ளது என்று கூறி அங்கு புதையல் தோன்ற முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வீட்டு உரிமையாளரும், தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேரும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் திலீப் என் லியனகேயின் கீழ் செயற்படும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
Discussion about this post