தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த சுதாகரன் துளசிகா (வயது-28) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி தீக்காயங்களுக்குள்ளான நிலையில், இவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை வழங்குப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
தனது காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார் என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post