நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் ரூபா 64 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை தேவை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இதில் இறைச்சி, முட்டை அல்லது பால் உள்ளடங்கவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை தேவைப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் தொழிலாளர் வர்க்கம் உட்பட 60 முதல் 65 வீதமானோர் அத்தகைய வருமானத்தை ஈட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post