அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தீப்பிடித்ததில் தீக்காயங்களுக்குள்ளான ஆசிரியை ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது-41) என்பவரே உயிரிழந்தவராவார். இவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார்.
தீக்காயங்களுக்கு உள்ளானவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அறையொன்றுக்குள் பெற்றோல் சேமிக்கப்பட்டிருந்தது என்றும், அதில் தீப்பற்றிக் கொண்டதாலேயே இந்த விபத்து நடந்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post