தேசிய திறைசேரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் பில்லியன் ரூபா கடன் எல்லையை ஆயிரம் பில்லியன் ரூபாவால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை நேற்று விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.
2021ஆம் ஆண்டு திறைச்சேரி கேள்விப் பத்திரம் வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்தால் இறுதியாக அனுமதி வழங்கப்பட்ட கடன் எல்லை 3 ஆயிரம் பில்லியன் ரூபாவாகவும், 2022 ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் செலுத்த வேண்டிய முழு திறைச்சேரி கேள்விப் பத்திரங்களின் பெறுமதி 2 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.
நாட்டின் கடன் நிலையை கீழ் நிலைக்கு தரப்படுத்தியதை தொடர்ந்து சர்வதேச சந்தைக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் தேசிய மட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் கடன் பெற வேண்டிய நிலை நிதியமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post