யாழ்ப்பாணம் அல்வாயில் 4 வயதுச் சிறுமியை வீடு புகுந்து இனந்தெரியாதவர் கடத்த முயன்றார் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பேர்த்தியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியும், சகோரனும் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு வீடு புகுந்த ஒருவர் சிறுமியைக் கடத்த முயன்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கத்தில் இருந்து விழித்த பேர்த்தி முகமூடி அணிந்த அந்த நபரைக் கண்டு அச்சத்தில் குரல் எழுப்பியுள்ளார். அதையடுத்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post