சுழிபுரம், தொல்புரம் கிழக்கில் திடீர் சுகவீனம் காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
பாலச்சந்திரமூர்த்தி பார்த்தீபன் (வயது-33) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். கடந்த நான்கு நாள்களாக சுகவீனமடைந்திருந்த இளைஞர் நேற்றுக் காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உயிரிந்த இளைஞரின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இளைஞர் வாந்தி எடுத்திருந்த நிலையில் வாந்தி சுவாசப் பாதைக்குள் சென்றதே உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post