இன்று முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையாலேயே சத்திர சிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று இருதய நோய் நிபுணர், மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 4 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இதய நோயாளிகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இதய நோயாளர்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர் என்று மருத்துவர் கோத்தபயா ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதய சத்திர சிகிச்சையின்போது வழங்கப்படும் பல அவசர மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், அடுத்த 3 மாதங்களுக்குள் மருந்துகள் வழங்கப்படாவிட்டால், ஏனைய சத்திரசிசிச்சைகளும் தடைப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post