தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.
தற்போதுள்ள நாட்டு நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புகளை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும், கோதுமை மா விலை உயர்வாலும் பேக்கரி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post