மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் பெண்ணொருவர் சில தினங்களுக்கு முன்னர் வெலககேபொல பொலிஸ் நிலையத்தில், தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார், இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதில், முறைப்பாட்டாளர் தன்னைத் தாக்கியது உறவினர் ஒருவர் என தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை நடத்திய போது சகல விபரங்களும் வெளிவந்துள்ளன.
முறைப்பாட்டாளர் வறுமையில் வாடும் ஒரு பிள்ளையின் தாயாவார் சுகயீனமுற்றுள்ள தமது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார் . அந்தப் பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.
ஈரப்பலா பறிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட உறவினர், கோபமுற்று அவரை தாக்கியுள்ளார். இரு தரப்பினரையும் பொலிஸார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
Discussion about this post