நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களது உணவு செலவு, குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றுக்காக வருடாந்தம் 35 கோடி ரூபா வரை செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உணவு, சிற்றுண்டி வகைகளுக்காக வருடாந்தம் 12 கோடி ரூபா செலவிடப்படுகிறது.
அத்துடன், நாடாளுமன்றத்தில் குடிநீருக்காக வருடாந்தம் 90 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மின்சாரத்திற்காக வருடாந்தம் எட்டுக் கோடி ரூபாவும் தொலைபேசிக்காக 14 கோடி ரூபாவும் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற நிதிப் பிரிவு தெரிவிக்கின்றது.
Discussion about this post