நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பொருளாதார மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது என்றும், புதிய வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு நடந்தால் உ தவிகளை வழங்குவதற்கும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தயார் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதனால் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களும் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post